நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு
பன்முகக் கலைஞர்கள் அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது,
விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர்கள் எஸ் அடைக்கல ராஜா, பண்ணை எம்பி சிங்காரவேலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர், மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் கே எஸ் சுப்பையா பாண்டியன், வணிகர் சங்கங்களின் பேரவையின் திருச்சி மாவட்ட தலைவர் எஸ் பி பாபு, போலீஸ் பார்வை பத்திரிகையின் ஆசிரியர் என் பாலகிருஷ்ணன், ஜே கே சி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் பா ஜான் ராஜ் குமார், வழக்கறிஞர் சிபி ரமேஷ், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்,
இந்நிகழ்ச்சியில் அமைப்பின் நிறுவன தலைவர் வேல்முருகன், ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன் அலி அகமது, பொருளாளர் பாலமுருகன், துணை ஒருங்கிணைப்பாளர் சுபேர்தீன் ஆகியோரின் தலைமையில், மாநில மகளிர் அணி தலைவி பொன்முடி பன்னீர்செல்வம், மகளிர் அணி துணை தலைவி நந்தினி, மாநிலச் செயலாளர் திருச்சி ரமேஷ், மாநிலத் துணைச் செயலாளர் ராஜா, மாநில மக்கள் தொடர்பாளர் டூயட் சசிகுமார்,
மகளிர் அணி கொள்கை பரப்பு செயலாளர் உமா ஆகியோரின் முன்னிலையில்
திருச்சி மாவட்டத்தின் நிர்வாகிகள் தலைவர் அன்வர் தீன், செயலாளர் ஐயப்பன், துணைத் தலைவர் ஜஸ்டின், திருச்சி மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினர் மயில்வாகனன் ஆகியோரின் ஏற்பாட்டில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டது,