- Advertisement -

திருச்சியில் கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன் சமூக வலை தளங்களில் நேரலை செய்த இளைஞர்கள் கைது!

0

- Advertisement -

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், மருதாண்டக்குறிச்சி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், மேற்கண்ட இடங்களில் சோமரசம்பேட்டை காவல்துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது அங்கு மருதாண்டகுறிச்சியை சேர்ந்த  ராகுல் (20), ஆளவந்தான் நல்லூரை சேர்ந்த பரமகுரு (எ) மனோஜ் (20), மல்லியம்பத்தை சேர்ந்த மதன்குமார் (20), உறையூரை சேர்ந்த சரவணன் (21), ஆளவந்தான் நல்லூரை சேர்ந்த பதன்ராஜ் (17) ஆகியோர் கையில் அபாயகரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு, அங்கு கடந்து செல்பவர்களிடம் “நாங்க இந்த ஏரியாவில் பெரிய ரவடிங்கடா என்றும், எங்ககிட்ட கஞ்சா வாங்கிட்டு போங்கடா என்றும், இல்லையென்றால் தலை துண்டாகிடும் என்றும்” மிரட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
Vagai
பின்னர் காவல்துறையினரை கண்டதும் தப்ப முயன்றவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து, கைது செய்து, 5 நபர்களின் மீதும்  சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இவர்கள் கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தனங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் நேரலையாக வீடியோ (Live video) பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகுல் என்பவர் மீது கொலை வழக்கு உள்பட 2 வழக்குகளும், பரமகுரு என்பவர் மீது 4 வழக்குகளும், மதன்குமார் என்பவர் மீது 7 வழக்குகளும், சரவணன்  என்பவர் மீது ஒரு வழக்கும் என ஏற்கனவே திருச்சி மாவட்ட மற்றும் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Bismi
மேலும் இது போன்று அபாயகரமான ஆயதங்களுடன் கூடிய புகைப்படங்கள், போதை பொருட்களை பயன்படுத்தும் விதமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடும் நபர்கள், அருவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு பிறந்த நாள் மற்றும் பிற விழா காலங்களில் கேக்குகள் வெட்டும் நபர்கள், வில்லன்கள் போன்ற தோனியில் பின் இசைகள் கொண்ட பாடல் மற்றும் வீடியோக்களை YouTube. Facebook, Instagram, Whatsapp, Twitter உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்  பதிவிடும் நபர்களின் விபரங்களை திருச்சி மாவட்ட காவல்துறையின் சமூக வலைதள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்