திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு, அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை.
மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜன்.திருப்பதி. ஜெயம் ஸ்ரீதர். ஸ்ரீரங்கம் நடேசன்.SVR ரவிசங்கர்.ஆமூர் ஜெயராமன். சமயபுரம் .ராமு சுந்தரமூர்த்தி .தினேஷ். எட்டரை அன்பரசு. மைக்கேல் ராஜ். ஆமூர் சுரேஷ் ராஜா .உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.