திருச்சி மாவட்டத்தில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

0

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை, மிக கனமழை என தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதாகவும் அவற்றை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை  குறிப்பாக பல இடங்களில் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே வேளையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் முதியவர்கள் என 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையடுத்து கொசு ஒழிப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப் படுத்தி உள்ளது. அதேபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களை சுற்றி கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் குப்பைகள் அல்ல படாமலும், தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்