திருச்சியில் புதிய மேம்பாலம், பறவைகள் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு!

0

திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகில் உள்ள மேம்பாலம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. அதேபோல் அய்யாலம்மன் படித்துறை அருகில் ரூ. 13.70 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பறவைகள் பூங்காவிற்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு இரண்டு பணிகளுக்கான அடிக்கலை நாட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதில் புதிதாக கட்டப்பட உள்ள மாரிஸ் தியேட்டர் மேம்பாலமானது சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கும் வகையில் இந்த ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.
கடந்த 1866 ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டிடத்திலான வளைவு வடிவ இருபக்க நடைபாதையுடன் 9 மீ அகலமுடைய ஒரு வழி பாதையாக இருந்தது. இரயில்வே துறையில், இப்பாலம் கட்டப்பட்டு 157 வருடம் காலம் ஆனதால், கனரக வாகனத்திற்கு ஏற்ற வகையில் இல்லாமலும், பாலம் பழுதடைந்த நிலையிலும், இரயில்வே மேம்பாலத்தினை உயரப்படுத்தியும் அகலப்படுத்தியும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இந்த பாலத்தை புதிதாக கட்டுவதற்கு ரூ.34.10 கோடி மதிப்பிடப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி திருச்சி மாநகராட்சியும், ரயில்வே துறையும் செலவீனங்களை பகிர்ந்துகொள்ளும்படி முடிவு செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி இரு வழிபாதையாக இப்பாலத்தினை இரயில்வே நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது.
தற்போது புதிதாக கட்டப்படவுள்ள இருவழிப்பாதை இரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.39 மீ. அகலம் 20.70 மீட்டர் ஆகிறது. இரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதியில் 223.75 மீ நீளமும், 15.61 மீட்டர் அகலம் உடையதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ நீளமும், 15.61 மீ அகலமுடையதாக சாலையினை தடுப்பு சுவர்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பாலத்தினை இருவழிப்பாதையாக கட்டப்படுவதினால் மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகர், தென்னூர், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி சுலபமாக செல்ல இயலும். இத்திட்ட பணியானது ஒரு வருட காலத்திற்குள் ( ஜீலை 2024) முடிவடைந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு :

- Advertisement -

திருச்சியில் உயர் மட்ட பாலம் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட இரண்டு திட்டங்களுமே செயல்படுத்தப்படும். உயர் மட்ட பாலம் அமைக்கலாம் என்று திட்டம் வகுத்தபோது ஏதும் இடையூரு இருக்க கூடாது என்பதால் தான் மெட்ரோ குறுக்கிட்டார்கள், தற்போது மெட்ரோ நிர்வாகம் அதற்கான தடையில்லா சான்றை வழங்கி விட்டது. மாரிஸ் மேம்பாலத்தை பொறுத்த வரை ரயில்வே துறையின் பங்கும் இருப்பதால் அடுத்த மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும். பஞ்சப்பூரில் அமைய இருக்கும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய ஐடி காரிடார், உயர்மட்ட பாலங்கள் என அனைத்து வகையிலும் திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்
இருக்கும் ஆளுநரின் நிலைபாடு குறித்த கேள்விக்கு ?

சப்ஜக்ட் இன் கோர்ட் என்று கடந்து சென்றார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்