புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!
தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா வரும் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.