- Advertisement -

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இஸ்ரோவின் ‘SPACE ON WHEELS’ விண்வெளி கண்காட்சி!

Bismi

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இஸ்ரோவின் ‘SPACE ON WHEELS’ விண்வெளி கண்காட்சி!

திருச்சி ஶ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) சார்பில் ‘SPACE ON WHEELS’ என்ற விண்வெளி நடமாடும் கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விண்வெளி அறிவியல் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் நூலக அதிகாரி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

Vagai

இஸ்ரோவின் விண்வெளி நடமாடும் கண்காட்சியான ‘SPACE ON WHEELS’ மூலம், இஸ்ரோவின் சாதனைகள், செயல்பாடுகள், வேலைவாய்ப்புகள், ராக்கெட் ஏவப்படும் விதம், பல்வேறு வகையான ஏவுகணை வாகனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களின் பயன்பாடுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மாணவர்களும் விண்வெளி அறிவியல் குறித்த தகவல்களை எளிதில் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் விடுத்த அழைப்பின் பேரில் இந்தக் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 26 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தக் கண்காட்சியில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களின் சிறிய மாதிரிகள், ராக்கெட் ஏவுதளம் தொடர்பான விளக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் ராக்கெட்டுகள் எவ்வாறு விண்ணில் ஏவப்படுகின்றன, செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

இஸ்ரோவில் பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் உள்ளன என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், பல்வேறு கல்விப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
உதாரணமாக, பி.எஸ்சி. இயற்பியல் படித்தவர்களுக்கு அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) பணியிடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணியிடங்களும் உள்ளன. தற்போது தங்களது மையத்தில் 104 பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, என்னென்ன கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன என்பது குறித்த தகவல்களும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதேபோன்று, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் தங்களது மையத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில், கால அட்டவணைக்கு ஏற்ப இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் இஸ்ரோவில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்