காந்தி ஜெயந்தி! வினோபா பள்ளியில் மலர் அஞ்சலி மற்றும் தூய்மைப் பணி – சமூக அமைப்புகள் முன்னெடுப்பு!
காந்தி ஜெயந்தி! வினோபா பள்ளியில் மலர் அஞ்சலி மற்றும் தூய்மைப் பணி – சமூக அமைப்புகள் முன்னெடுப்பு!

திருச்சி:

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உன்னதக் கொள்கைகளான “தூய்மை மற்றும் சேவை” ஆகியவற்றை முன்னிறுத்தும் வகையில் லால்குடி வினோபா பள்ளியில் தூய்மைப் பணி மற்றும் காந்தி அடிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வை காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை மற்றும் பாரத பண்பாடு கேந்திரம் இணைந்து முன்னெடுத்தன. திருச்சி புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த AS கார்த்திகேயன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்தச் சேவைப் பணியில், லால்குடி We The Leaders Foundation அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சகோதரர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வையும், பொது இடங்களில் தூய்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் இந்த முன்னெடுப்பு அமைந்தது.

#GandhiJayanti #MahatmaGandhi #CleanlinessDrive #SwachhBharat #SocialService #Tiruchirappalli #Lalgudi #WeTheLeadersFoundation #BharathaPanbattuKendram #VinobaSchool #YouthForChange #CommunityService





Comments are closed.