- Advertisement -

ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் சொத்து மோசடி! மதுரை விரைந்த திமுக பகுதிச் செயலாளர் விரட்டிப் பிடித்து கைது!

- Advertisement -

ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் சொத்து மோசடி! மதுரை விரைந்த திமுக பகுதிச் செயலாளர் விரட்டிப் பிடித்து கைது!

​திருச்சி:

 

Vagai

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக அபகரித்த வழக்கில், திமுக பகுதிச் செயலாளர் ராம்குமாரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

 

​ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் உள்ள சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள ரங்கநாதர் கோயில் சொத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாக கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் திருச்சி மாநகர குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

 

Bismi

​ராம்குமாருக்கு போலி ஆவணங்கள் மூலம் ரூ.2.90 கோடி பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுத்த சென்னையைச் சேர்ந்த பத்மஜா, விஜயா, சவுந்தரராஜன், புதுச்சேரியைச் சேர்ந்த ரங்கவரதன் மற்றும் ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

 

முன்ஜாமீன் மனு விசாரணைக்காக மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு காரில் புறப்பட்ட ராம்குமார், பஞ்சப்பூர் அருகே மாயமானதாகக் கூறி அவரது குடும்பத்தினர் கடத்தல் புகார் எழுப்பினர்.

 

​ இந்நிலையில், மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான தனிப்படையினர் ராம்குமாரை விரட்டிப் பிடித்து முறைப்படி கைது செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.

 

​நீதிமன்றத்தில் ஆஜராகச் சென்ற வழியில் திமுக கட்சி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

​#Srirangam #TrichyCrime #DMK #LandScam #TamilNaduPolice #BreakingNews #SrirangamTemple #CrimeNews #Trichy

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்