- Advertisement -

மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வுக் கூட்டம்!

- Advertisement -

மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வுக் கூட்டம்!

​புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறு கட்டமைப்பு மற்றும் பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளித் தலைமை ஆசிரியர் மாலா தலைமையில் நடைபெற்றது.

Vagai
Bismi

​இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பா. கனகராணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பள்ளியின் வளர்ச்சி மற்றும் முன்னெடுப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தலைமை ஆசிரியர் மாலா பேசுகையில், பள்ளி மேலாண்மைக் குழுவை எவ்வாறு மறுகட்டமைப்பு செய்வது மற்றும் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் குறித்துப் பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

​தொடர்ந்து, அகில உலக பொங்குதமிழ் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் எம். சிங்காரம் மாணவர்களின் தனித்திறன் மேம்பாடு குறித்தும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் பள்ளியின் முன்னேற்றத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு குறித்தும் சிறப்புரையாற்றினர்.

​இக்கூட்டத்தில் செந்தில், வெள்ளைச்சாமி, ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில், பள்ளி ஆசிரியர் ரோஸ்மின் நன்றி கூறினார். தங்கள் குழந்தைகளைச் சிறந்த முறையில் வழிநடத்தி பள்ளியின் வளர்ச்சிக்குத் துணைநிற்பதாகப் பெற்றோர்கள் உறுதியளித்தனர்.

​#Pudukkottai #Thirumayam #Melur #SchoolManagementCommittee #SMCTamilNadu #ParentAwareness #TamilNaduEducation #SchoolDevelopment

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்