- Advertisement -

மாநகராட்சி அதிகாரிகளுடன் வணிகர்கள் ஆலோசனை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து விளக்கம் அளிக்க சிறப்பு கூட்டம்!

- Advertisement -

மாநகராட்சி அதிகாரிகளுடன் வணிகர்கள் ஆலோசனை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து விளக்கம் அளிக்க சிறப்பு கூட்டம்!

​திருச்சி, ஆக. 03:

Vagai

​வணிக நிறுவனங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் தீவிர பிளாஸ்டிக் பரிசோதனை மற்றும் அபராத நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, வணிகர் சங்கத்தின் சார்பாக மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

​சமீபகாலமாக நமது பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வுகளின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அரசு விதிமுறைகளின்படி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

​இதுதொடர்பாக மாநகராட்சி எஸ்.ஐ. செல்வி பிரியதர்ஷினி அவர்களை வணிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து விளக்கம் கோரினர். அப்போது, வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதாந்திர கூட்ட ஏற்பாடு செய்யுமாறும், அதில் தாம் நேரில் கலந்துகொண்டு முழுமையான விளக்கங்களை அளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

​அதன்படி, சங்க அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர சிறப்பு கூட்டத்தில் மாநகராட்சி எஸ்.ஐ. செல்வி பிரியதர்ஷினி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பிளாஸ்டிக் தடை சட்ட திட்டங்கள், மாற்றுப் பொருட்களின் பயன்பாடு மற்றும் அபராதங்களைத் தவிர்க்கும் முறைகள் குறித்து வணிகர்களுக்கு விரிவான விளக்கங்களை அளித்தார்.

Bismi

​இக்கூட்டத்தில் வணிகர்களின் கோரிக்கை மனுக்கள் வலியுறுத்தப்பட்டதுடன், திரளான சங்க நிர்வாகிகளும், வணிகர்களும் கலந்துகொண்டு தங்களுக்கான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

​ நிகழ்ச்சியில்

A. Md. மீரான் – தலைவர்

V. அய்யல்சாமி – செயலாளர்

S. சவரிமுத்து – பொருளாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

#CorporationNews #PlasticBanAwareness #BusinessCommunity #MerchantAssociation #SpecialMeeting #CityCorporation #PublicNotice #TamilNews #PressRelease

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்