- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ‘சோழன் பார்வை’ செய்தியாளர், திமுக பிரமுகர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாணாபுரம் வட்டம் பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அங்கு வரும் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்த தகவலின் அடிப்படையில், உண்மையைக் கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் ‘சோழன் பார்வை’ மாவட்ட செய்தியாளர் பிரபு கள ஆய்விற்காக நேரில் சென்றுள்ளார்.

 

​அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ரவி என்பவர், செய்தியாளர் பிரபுவின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, வண்டியின் சாவியைப் பிடுங்கிக் கொண்டு மிரட்டும் தொனியில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்த அங்கன்வாடி மையத்தில் அந்த திமுக பிரமுகரின் மனைவி பணியாற்றி வரும் நிலையில், அதிகார பலத்தைப் பயன்படுத்தி அங்கன்வாடிக்குச் சொந்தமான இடத்தை அவர் ஆக்கிரமித்து தனக்காகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

 

Bismi

​தன் மனைவியின் பணி மற்றும் அரசியல் செல்வாக்கைச் சாதகமாக்கிக் கொண்டு அங்கன்வாடி இடத்தை ஆக்கிரமித்துள்ளதை மறைப்பதற்காக, செய்தி சேகரிக்க வந்த செய்தியாளரைத் தாக்கும் நோக்கில் மிரட்டியதோடு, அவர் மீது பொய் வழக்குகளைப் போட்டு களங்கம் ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

Vagai

​அங்கன்வாடி மையத்தில் நிலவும் துர்நாற்றம் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு குறித்து உடனடியாக அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட திமுக பிரமுகர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கொதிப்புடன் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளரைப் பணிசெய்ய விடாமல் மிரட்டிய திமுக பிரமுகர் மீது ‘சோழன் பார்வை’ செய்தியாளர் பிரபு காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

​#Kallakurichi #JournalistThreatened #AnganwadiEncroachment #ChozhanParvai #DMKEncroachment #KallakurichiNews #PressFreedom #PublicProtest #KallakurichiPolice #TamilNaduNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்