திருமயம் தீரர் சத்தியமூர்த்தி நினைவு கிளை நூலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா: நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்பு!
திருமயம் தீரர் சத்தியமூர்த்தி நினைவு கிளை நூலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா: நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்பு!

திருமயம் தீரர் சத்தியமூர்த்தி நினைவு கிளை நூலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நூலகத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் திருமயம் நீதிமன்ற நீதிபதிகள் திரு. M. தயாளன் மற்றும் திருமதி. S. கவிதா ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.



இவர்களுடன் வழக்கறிஞர்கள் நடராஜன், கண்ணன், நீதிமன்றப் பணியாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் K. பால்ராஜ், ராசு, அப்துல் காதர் மற்றும் பட்டயத்தலைவர் திரு. K. கபூர் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். மேலும், மணவளக்கலை தலைவர் திரு. M. சுப்பிரமணியன், திருமதி. சிவகாமி சுப்பிரமணியன், பாக்கியம் ஃபௌன்டேசன் சார்பில் ஸ்டாலின் பாக்கியராஜ், AIM அறக்கட்டளை சார்பில் M. சைமன், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் N. பழனியப்பன், பாப்பா வயல் கிராம தலைவர் திரு. ஆறுமுகம், திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. ஜெயமணி மற்றும் பள்ளி ஆசிரியைகளும் இணைந்து நூலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, ஃபோர்ட் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நூலகப் பயன்பாட்டிற்காக ரூபாய் 7,000 மதிப்பிலான 10 நாற்காலிகளும், நட்ட மரக்கன்றுகளைப் பராமரிப்பதற்காக ரூபாய் 25,000 மதிப்பிலான சொட்டுநீர் பாசன அமைப்பிற்கான நன்கொடையும் விழாவில் வழங்கப்பட்டன.
இந்தச் சிறப்பான விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நூலக வாசகர் வட்ட தலைவர் (பொறுப்பு) க. பிரபாகர், நூலகர் M. மாலதி மற்றும் K. மகாலெட்சுமி ஆகியோர் இணைந்து மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவின் நிறைவாக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
#Thirumayam #LibraryEvent #TreePlantation #RotaryClub #ThirumayamCourt #JudgesPlantTrees #GreenInitiative #Noolagam #WelfareDonations #CommunityService





Comments are closed.