- Advertisement -

விவசாயிகளுக்கு மெகா அறிவிப்பு: கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் சா. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு!

- Advertisement -

​விவசாயிகளுக்கு மெகா அறிவிப்பு: கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் சா. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு!

 

​சென்னை:

 

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சா. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.05.2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Vagai

​தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வி. காந்திராஜ், நிதித்துறை அமைச்சர் திரு. என். மரிய வில்சன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

​01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இந்த தள்ளுபடி திட்டம் பொருந்தும். இதன் மூலம் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், அரசுக்கு கூடுதலாக ரூ.2,044.46 கோடி செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

​கடன் தள்ளுபடி செய்யப்படும் முழு விவரங்கள்:

​ரூ. 50,000 வரை பெற்ற கடன்கள்:

​குறு விவசாயிகளுக்கு அவர்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் (100 சதவீதம்) தள்ளுபடி செய்யப்படும்.

​சிறு விவசாயிகளுக்கு அவர்கள் பெற்ற கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

 

​ரூ. 50,001 முதல் ரூ. 60,000 வரை பெற்ற கடன்கள்:

​குறு விவசாயிகளுக்கு ரூ. 40,000 தள்ளுபடி செய்யப்படும்.

​சிறு விவசாயிகளுக்கு ரூ. 20,000 தள்ளுபடி செய்யப்படும்.

 

​ரூ. 60,001 முதல் ரூ. 70,000 வரை பெற்ற கடன்கள்:

​குறு விவசாயிகளுக்கு ரூ. 30,000 தள்ளுபடி செய்யப்படும்.

​சிறு விவசாயிகளுக்கு ரூ. 15,000 தள்ளுபடி செய்யப்படும்.

 

​ரூ. 70,001 முதல் ரூ. 80,000 வரை பெற்ற

கடன்கள்:

​குறு விவசாயிகளுக்கு ரூ. 20,000 தள்ளுபடி செய்யப்படும்.

Bismi

​சிறு விவசாயிகளுக்கு ரூ. 10,000

 

தள்ளுபடி செய்யப்படும்.

​ரூ. 80,001 முதல் ரூ. 90,000 வரை பெற்ற கடன்கள்:

​குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி செய்யப்படும்.

​சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி செய்யப்படும்.

 

​ரூ. 90,001 முதல் ரூ. 1,00,000 வரை பெற்ற கடன்கள்:

​குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி செய்யப்படும்.

​சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி செய்யப்படும்.

 

​ரூ. 1,00,000-க்கு மேல் பெற்ற கடன்கள்:

​குறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி செய்யப்படும்.

​சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி செய்யப்படும்.

 

​இதர பெரு விவசாயிகள்:

​கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ. 5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

​முக்கிய அம்சங்கள்:

​இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, இந்த கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் தமிழக அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தும்.

​தற்போதைய இக்கட்டான நிதிச் சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலன் காக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

​இந்த அதிரடி நடவடிக்கை, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு புதிய கடன்களைப் பெற்று விவசாயிகள் விவசாயம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

 

​#BreakingNews #TamilNadu #Vijay #CMVijay #TNGovt #FarmersLoanWaiver #AgricultureTN #CooperativeBank #CropLoan #TamilNaduNews #FarmersWelfare

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்