- Advertisement -

திருச்சியில் பரபரப்பு, சனாதன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம் – இந்து முன்னணியினர் இடையே பயங்கர மோதல்!

- Advertisement -

திருச்சியில் பரபரப்பு, சனாதன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம் – இந்து முன்னணியினர் இடையே பயங்கர மோதல்!

​திருச்சி:

Vagai

திருச்சியில் சனாதன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் மற்றும் இந்து முன்னணியினர் இடையே ஏற்பட்ட கடும் மோதலில், ஒருவரையொருவர் குச்சிகள் மற்றும் வாட்டர் பாட்டில்களால் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

​சம்பவம் என்ன?

 

​மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள வழிவிடு முருகன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்குப் போட்டியாக, அதே இடத்தில் சனாதனத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.

 

​இதன் காரணமாக, அசம்பாவிதங்களைத் தவிர்க்க மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை பகுதிக்கு மாற்றப்பட்டனர். அங்கு வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர்.

 

​வாக்குவாதம் மற்றும் மோதல்:

 

Bismi

​அதே நேரத்தில், இந்து முன்னணி அமைப்பினரும் சனாதனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி அங்கு திரண்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. சலசலப்பு முற்றவே, இரு தரப்பும் குச்சிகள், காலணிகள் மற்றும் வாட்டர் பாட்டில்களை வீசி பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

​அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

 

​இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி போஜராஜன் பேட்டி:

 

​இந்த மோதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி போஜராஜன் கூறியதாவது:

 

​”சனாதனத்தை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது, ஜாமீனில் தான் வெளியே உள்ளார். இருப்பினும் சட்டமன்றத்திலும் அவர் சனாதனத்திற்கு எதிராகவே பேசியுள்ளார்.

 

​அன்று பெரியார் விநாயகர் சிலையைச் சாலையில் போட்டு உடைத்தார். அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆபாச வார்த்தைகளால் பேசினார். அத்தகைய செயல்கள் தான் தற்போதும் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.”

​இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார். இந்த மோதல் சம்பவத்தால் திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

​#Trichy #Sanatanadharma #Protest #Clash #HinduMunnani #MakkalKalaiIlakkiyaKazhagam #BreakingNews #TamilNaduNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்