- Advertisement -

திருச்சி கிழக்கு, நட்சத்திரத் தொகுதியில் ‘நான்கு முனை’ பலப்பரீட்சை! – மாலையோடு கழன்றதா அதிர்ஷ்டம்? கலக்கத்தில் அதிமுக!

- Advertisement -

திருச்சி கிழக்கு, நட்சத்திரத் தொகுதியில் ‘நான்கு முனை’ பலப்பரீட்சை! – மாலையோடு கழன்றதா அதிர்ஷ்டம்? கலக்கத்தில் அதிமுக!

திருச்சி:

Vagai

தமிழக சட்டமன்றத் தேர்தலின் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதியாக உருவெடுத்துள்ளது திருச்சி கிழக்கு. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் களம் காண்பதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இத்தொகுதியின் பக்கம் திரும்பியுள்ளது.

திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், களத்தில் அரங்கேறும் சுவாரசியமான நிகழ்வுகள் தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் – அபசகுனத்தால் கலங்கிய நிர்வாகிகள்!

 

​அதிமுக சார்பில் இந்திரா கணேசன் கல்லூரி உரிமையாளர் ராஜசேகர் போட்டியிடுகிறார். வேட்பாளர் தேர்வில் மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், ஆவின் கார்த்திக் மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், தலைமை ராஜசேகரை முன்னிறுத்தியது.

​இந்நிலையில், நேற்று சிந்தாமணி பகுதியில் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பகுதிச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில் அவருக்கு பிரம்மாண்டமான ராட்சச ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக அந்த மாலை திடீரென அறுந்து கீழே விழுந்தது. “வெற்றிக்குக் காத்திருக்கும் வேளையில் இப்படி அபசகுனமாக நடந்துவிட்டதே” என அங்கிருந்த மகளிரும் கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

வாக்காளர்களுக்கு பரிசு? – தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை

Bismi

​வேட்பாளர் ராஜசேகர் தொகுதி முழுவதும் வாக்காளர்களைச் சந்தித்து அதிமுக துண்டுகளைப் பரிசாக வழங்கி வருகிறார். கட்சித் துண்டுகள் இலவசமாக வழங்கப்பட்டாலும், அதன் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படுமா? இதனை தேர்தல் ஆணையம் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

விஜய் வருகை – ‘வீட்டுக்கு வீடு இரண்டு விஜய்’ என தவெக அதிரடி!

​தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இத்தொகுதியில் போட்டியிடுவது மற்ற வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தவெக வேட்பாளர் இன்னும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கவில்லை என்றாலும், அக்கட்சியினர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளனர். “எங்கள் தலைவர் வரத் தேவையில்லை, வீட்டுக்கு வீடு இரண்டு ‘விஜய்கள்’ (தொண்டர்கள்) தேர்தல் வேலைகளைப் பார்த்துக்கொள்வார்கள்” என அவர்கள் அசால்டாகக் கூறுகின்றனர்.

 

திமுக மற்றும் மற்ற வேட்பாளர்களின் வியூகம்:

​திமுக (இனிக்கோ இருதயராஜ்): ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என சூளுரைத்து, தெருத் தெருவாகச் சென்று பல்வேறு சங்கத்தினரைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

 

நாம் தமிழர் (டாக்டர் கிருஷ்ணசாமி): எளிய முறையில் மக்களைச் சந்தித்து, தொகுதியின் அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைத்து அமைதியான முறையில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

 

சின்னம்மா கட்சி (நந்தகுமார்): தென்னந்தோப்பு சின்னத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து, போட்டியை மேலும் சூடாக்கியுள்ளார்.

யார் அந்த ‘ஸ்டார்’? – மே 4-ல் விடை தெரியும்!

 

​வேட்பாளர்கள் அனைவரும் கோவில்களில் வழிபாடு நடத்திவிட்டு களமிறங்கினாலும், அதிமுக வேட்பாளருக்கு நேர்ந்த மாலை விபத்து தொகுதியில் விவாதப் பொருளாகியுள்ளது.

 

ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு, மே 4-ஆம் தேதி வெளியாகும்போது, திருச்சி கிழக்கின் உண்மையான ‘ஆட்டநாயகன்’ யார் என்பது தெரிந்துவிடும்.

 

​#TrichyEast #TamilNaduElection2026 #AIADMK #DMK #TVK #VijayInTrichy #ElectionNews #Rajasekar #InigoIrudayaraj #Seeman #TNElectionUpdate

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்