- Advertisement -

லால்குடி தொகுதியை சீரழித்த திமுக, காளியம்மாள் அதிரடி பிரச்சாரம்!

- Advertisement -

லால்குடி தொகுதியை சீரழித்த திமுக, காளியம்மாள் அதிரடி பிரச்சாரம்!

 

​திருச்சி | ஏப்ரல் 09, 2026

 

​லால்குடி சட்டமன்றத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் அவர்களை ஆதரித்து, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் அவர்கள் நேற்று (08.04.2026) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக மற்றும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களைச் சாடி அவர் ஆற்றிய உரை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Vagai

​முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் விவாதங்கள்:

 

​சிதைந்து போன கட்டமைப்பு: கடந்த நான்கு முறைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திமுகவின் சௌந்தரபாண்டியன், தொகுதியை முற்றிலும் நாசமாக்கி விட்டார். சாலை வசதிகள் இல்லை, பாதாளச் சாக்கடைத் திட்டம் தோல்வியடைந்து கழிவுநீர் தெருக்களில் ஓடும் அவலநிலை நீடிக்கிறது.

 

​மாற்றத்திற்கான அழைப்பு: “உள்ளூர் காரர் என்று சொல்லி 4 முறை வாக்களித்தீர்களே, என்ன மாறது?” எனக் கேள்வி எழுப்பிய அவர், 20 ஆண்டுகளில் ஒரு கிராமத்தைக் கூட குடிசை இல்லா கிராமமாக மாற்றவில்லை என்றும், அடிப்படை கழிவறை வசதிகள் கூட இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

 

Bismi

​வேட்பாளர் பின்னணி: டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் விவசாயம் தெரியாதவர் என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த காளியம்மாள், “அவர் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; 25 ஆண்டுகள் நாட்டுக்காகப் பணியாற்றிய ராணுவ வீரரின் மகள்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

 

​கு.ப. கிருஷ்ணன் மீது விமர்சனம்: தமிழக வெற்றி கழக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணனை உருவாக்கியதே அதிமுக தான் என்பதை அவர் மறந்து பேசுகிறார் எனச் சுட்டிக்காட்டினார்.

 

​”அரசாங்கம் நிதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், வெற்றி பெற்றால் மக்களின் தேவைகளைத் தன் சொந்த முயற்சியில் நிறைவேற்றும் நற்குணம் கொண்டவர் டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின்.” – காளியம்மாள்

 

 

​எடப்பாடியாரின் வாக்குறுதிகள்:

 

​பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த அண்ணன் எடப்பாடியார் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி இரட்டை இலை சின்னத்திற்கு (தேசிய ஜனநாயக கூட்டணி) வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

​#LalgudiElection2026 #ADMK #DrLeemaRoseMartin #KaliammaiSpeech #TrichyPolitics #ElectionCampaign #EdappadiPalaniswami #LalgudiDevelopment

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்