- Advertisement -

தேசிய ஜனநாயக கூட்டணி மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்.

- Advertisement -

தேசிய ஜனநாயக கூட்டணி மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்.

 

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன், வேட்பு மனு தாக்கல் செய்து தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

Bismi

அந்த வகையில் இன்று

Vagai

கருமண்டபம் புதுத்தெரு, மாந்தோப்பு தெற்கு தெரு, ராம்நகர், சோழகர் நகர், விக்னேஷ் நகர், ஆர்.எம்.எஸ் காலனி, சமத்துவ நகர், ஆல்பா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று, பொது மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளர் ராஜசேகரனுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு, வேட்பாளர் ராஜசேகரனுக்கு ஆதரவாக குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்