திருச்சியில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் – சாட்டை துரை முருகன் பங்கேற்பு!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வேட்போனு தாக்கல் நாளை (மார்ச்.30) தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு, மேற்கு, ஶ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் புத்தூர் நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு, வேட்பாளர்கள் கிழக்கு – கிருஷ்ணசாமி, மேற்கு – புவனேஸ்வரி, ஸ்ரீரங்கம் – தர்மராஜ், திருவெறும்பூர் – ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து, பிரச்சார உரையாற்றினார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் நாளை (மார்ச்.30) ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.





Comments are closed.