- Advertisement -

100 % வாக்களியுங்கள், பணம் வாங்கி கொண்டு வாக்களிக்க வேண்டாம் – நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் வேண்டுகோள்! ஜெபி (எ) ஜெயராம் பாண்டியன்

- Advertisement -

100 % வாக்களியுங்கள்; பணம் வாங்கி கொண்டு வாக்களிக்க வேண்டாம் – நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் வேண்டுகோள்!

ஜெபி (எ) ஜெயராம் பாண்டியன் வேண்டுகோள்!

 

Bismi

Vagai

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை தீவிர படுத்தியுள்ளனர். அந்தவகையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் நல்ல வேட்பாளரை மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்றை தொடங்கி தொடர்ந்து 12 ஆண்டுகளாக மக்கள் பணி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வரும், மக்களின் போராளி அஞ்சா நெஞ்சன் ஜெபி என்ற ஜெயராம் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இன்று ஜெபியிடம் கேட்ட போது அவர் நான் மக்கள் பணி செய்ய பிறந்தவன் எனவும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நான் மக்களுக்காக என்ன உதவி கேட்டாலும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

நீங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க இருக்கிறீர்கள் என்று கேட்ட போது? அனைத்து கட்சியினரும் நம்முடைய தோழமை கட்சி தான். அனைவரும் என் நண்பர்கள் தான். மக்கள் 100 சதவீத வாக்கு செலுத்த வேண்டும் என்றும், மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க யார் வருவார்கள் என்று உங்களுக்கு நம்பிக்கை வருகிறதோ அவர்களுக்கு உங்கள் வாக்கை செலுத்த வேண்டும் என்றும், பணம் பெற்று கொண்டு வாக்கு செலுத்த வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார். மேலும் தான் என்றும் நேதாஜி வழியில் செல்வோம் எனவும் கூறினார். அது மட்டுமல்லாது தனது இயக்கத்தில் 3500 இளைஞர்கள் தன்னெழுச்சியாக வந்து இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்