தமிழ்நாடு அரசு சார்பில் கிறிஸ்துவ மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை – ஐசிஎப் பேராயம் திருச்சி 

தமிழ்நாடு அரசு சார்பில் கிறிஸ்துவ மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை – ஐசிஎப் பேராயம் திருச்சி

திருச்சி ஐசிஎப் பேராயம் சார்பில் நிர்வாக குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஜேகேசி நிறுவனர் ஐசிஎப் பேராயர் முனைவர் பா ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

திருச்சி ஏர்போர்ட் எப்சிஏ திருச்சபை பேராயர் ஏ.ஆபிரகாம் தாமஸ் முன்னிலை வகித்தார்.

Bismi

முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்

சி. அருள் வரவேற்புரை ஆற்றினார். திருச்சி இம்மானுவேல் தேவாலயம் பேராயர் எஸ் ஜேம்ஸ் ஈஸ்டர் ராஜு கருத்துரை வழங்கினார்.

முடிவில் மாநகர செயலாளர் ரெவரண்ட் எஸ். ஜான் டோமினிக் நன்றி கூறினார்.

இதில் பாஸ்டர்கள் ராஜு, ஆல்பர்ட் ஜான், ஜோசப், மற்றும் மாநில செயலாளர் பாஸ்டர் எ.ராஜன், பிஆர்ஓ விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாடு 2026 ஜூலை மாதம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் ஆலோசனை செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் கிறிஸ்துவ மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை வைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்