தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

 

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக , அதிமுக , அமமுக , தமாக கட்சிகளின் மகளிர் அணி சார்பில் திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருச்சி புறநகர மாவட்ட மகளிர் அணி தலைவி மங்கள கௌரி மற்றும் மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவி மலர்க்கொடி ஆகியோர் தலைமை தாங்கினார்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் மகளிர் அணியின் மாநில துணைத் தலைவி புவனேஸ்வரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

 

Bismi

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மகளிர் அணியினர் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தமிழகத்தில் நாள்தோறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தான் காரணம் என்று கூறி, தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

மேலும் போதைப்பொருள் கலாச்சாரத்தால் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி, முன்னாள் எம்பி குமார், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி சுப்பையா

உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சிகளை சேர்ந்த மகளிர் அணியை சேர்த்த 300க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்