மீன் முள்ளு திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீடு!

சென்னை வடபழனியில் உள்ள பிரபல பிரசாத் லாப்பில் மீன் முள்ளு‌‌ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு நிகழ்வு நடைபெற்றது. மிராஸ் கிரியேஷன்ஸ்‌ Dr.சுப்பையா பிள்ளை தயாரிப்பில், திரைப்பட இயக்குநர் ‌ஏ.ஆர்.எம்.ரஸிம் ‌இயக்கத்தில்‌ உருவாகியுள்ள மீன் முள்ளு திரைப்படத்தின் டிரெய்லர் ‌மற்றும்‌ பாடல் வெளியிட்டு நிகழ்வு நடைபெற்றது.

இத்திரைப்படத்தின் நாயகனாக இஸ்புல், கதாநாயகியாக வெண்மதி மற்றும் ‌முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட நடிகர்கள் அசோக் பாண்டியன், பிர்லா போஸ், சேரன் ராஜ், கிருபா மற்றும் ஜெகன் மணிவாசகம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Bismi

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் திரைப்பட இயக்குனரும் நடிகருமான கங்கை அமரன் கலந்து கொண்டு, மீன் முள்ளு திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டு சிறப்பித்தார்.  இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக அன்பழகன் ‌மற்றும் ஏ. ஆர்.எம். ரஸிம் ஆகியோரும்,  ‌இசை இந்திரஜித்தும் செய்துள்ளனர். ‌இத்திரைப்படத்தில் அசோசியேட் டைரக்டராகவும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் திருச்சியை சேர்ந்த தேசிய மற்றும் ‌மாநில விருதுகளை பெற்றவருமான ஆர்.ஏ.தாமஸ் பணியாற்றியுள்ளார்.

இணை இயக்குநர்களாக பொன்ராஜ் யாபேஷ் ‌உள்ளிட்டோரும், கலை இயக்குனராக ஜெயக்குமார், ஒப்பணை அன்புசெல்வம், உதவி இயக்குநர்களாக இளங்கோவன், சாகுல், ராகவன், மாரியப்பன், ரமேஷ், பாலசுப்பிரமணியம், சுரேஷ், தேவேந்திரன், யஷ்வந்த், லாரன்ஸ், எபிநேசன், ‌மாரிமுத்து, கார்த்திக், காளிதாஸ் ‌ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள். மேலும் இந்நிகழ்வில் சுதி, காயத்ரி, ஹரிஹரன், ரோஸ்லின், சரண், ஆரோன், சஞ்ஜய், அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மீன் முள்ளு திரைப்படம் விரைவில் வெளியிடுவதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்