- Advertisement -

‘ஜெயிலர் 2’ உருவான பின்னணி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்த சுவாரசியப் பக்கங்கள்!

Bismi

‘ஜெயிலர் 2’ உருவான பின்னணி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்த சுவாரசியப் பக்கங்கள்!

​சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15 அன்று வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டமாக ஒளிபரப்பான ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’ நிகழ்வில், இரண்டாம் பாகத்தை வழக்கமாக விரும்பாத தான், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

​“சீக்வல் என்றாலே எனக்குப் பயம்!”

Vagai

​“பொதுவாகவே படங்களின் இரண்டாம் பாகத்தை நான் உற்சாகப்படுத்துவது இல்லை. சீக்வல் என்றாலே கிரியேட்டிவிட்டி குறைந்துவிட்டது, ஏற்கெனவே செய்த விஷயத்தில் கொஞ்சம் உப்பு, காரம் கூட்டி மீண்டும் தருகிறார்கள் என்ற கருத்து எனக்கு உண்டு.

​பாட்ஷா 2: மாணிக் பாட்ஷா திருந்தி ஆட்டோ டிரைவராக வாழ்ந்தாலும், வில்லன்களும் போலீஸும் அவரை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் என்ற கோணத்தில் தயாரிப்புத் தரப்பில் பலமுறை கேட்டார்கள்; நான் ஏற்கவில்லை.

​பேட்ட 2: கார்த்திக் சுப்புராஜ் மிகச் சிறந்த கதைக் களத்துடன் வந்தார். ‘பேட்ட’யில் விஜய் சேதுபதியின் ‘ஜீவா’ கதாபாத்திரம் பழிவாங்குவது போல திரைக்கதை அமைத்திருந்தார். அப்போதும் இரண்டாம் பாகத்தில் நடிக்க எனக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை.”

​‘ஜெயிலர் 2’ உருவான புள்ளி

​“ஜெயிலர் படம் முடிந்து ஓடிடியில் பார்த்தபோதுதான் எனக்கு அந்தப் பொறி தட்டியது. படத்தில் வர்மா சாகும்போது சர்வதேசக் கும்பலைப் பற்றி எச்சரித்திருப்பார்; அதுபோக 3 கண்டெய்னர்களில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஜெயிலரிடம் இருக்கிறது. சர்வதேச மாஃபியா எப்படி அவரைச் சும்மா விடும்? மேலும், 70 வயதைக் கடந்த நிலையில் எனக்குப் பொருத்தமான கதாபாத்திரமும் இதுவே.

​உடனே நெல்சனை அழைத்துப் பேசினேன். ஆனால் அவரோ, ‘இல்லை சார், வேண்டாம்… ஏற்கெனவே அதை முழுசாப் புழிஞ்சு எடுத்துட்டோம், இது சரிவராது’ என வெளிப்படையாக மறுத்துவிட்டார்.”

- Advertisement -

​நெல்சனின் திடீர் திருப்பம்

​“அந்த சமயத்தில் பிற மொழிகளிலும் பெரும் வரவேற்பு பெற்று, தெலுங்கில் ஒரு பெரிய படத்திற்கு கமிட்டாகியிருந்தார் நெல்சன். ‘சரி’ என்றுவிட்டு நான் ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தினேன். ஒரு மாதம் கழித்து கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த என்னை நேரில் சந்தித்த நெல்சன், ‘ஜெயிலர் 2 பண்ணலாம் சார்’ என்றார்.

​‘வேட்டையன்’, ‘லால் சலாம்’, ‘கூலி’ என என் கைவசம் பல படங்கள் இருந்தபோதிலும், ‘கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க சார்’ எனக் கேட்டு, ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியுள்ளார்.”

​தமன்னா மிஸ்ஸிங் & 45 வருட ரகசியம்!

​“இந்தப் படத்தில் எல்லாமே சிறப்பாக வந்திருக்கிறது; ஒன்று மட்டும் மிஸ்ஸிங்—அது தமன்னா. இரண்டு பாடல்களில் ஒரு பாடலுக்கு தமன்னாவை வைக்கலாம் என நெல்சனிடம் கேட்டதற்கு, ‘உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காகப் பாடலில் வைக்க முடியாது சார்’ என்றார்.

​அதற்கு நான், ‘எனக்குப் பிடிக்கும் என்று இல்லை, மக்களுக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்ததை மட்டும் செய்ய நினைத்திருந்தால் 45 ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூருவுக்குத் திரும்பியிருப்பேன். மக்களுக்குப் பிடித்ததால்தான் இன்று வரை இங்கே நிற்கிறேன்’ என்றேன்.”

​“இந்த வயதிலும் எப்படி கதாநாயகனாக நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அனைத்திற்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களும் தமிழ் மக்களுமே காரணம்!” — ரஜினிகாந்த்

​

#Jailer2 #SuperstarRajinikanth #Rajinikanth #NelsonDilipkumar #SunPictures #AnirudhMusical #Jailer2SuperShow #Kollywood #SuperstarMagic

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்