திருநெல்வேலியில் சுமார் 4000 பேர் பங்கேற்கும், பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான, 4 நாட்கள் நீச்சல் போட்டியை துவக்கி வைத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்!
திருநெல்வேலியில் சுமார் 4000 பேர் பங்கேற்கும், பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான, 4 நாட்கள் நீச்சல் போட்டியை துவக்கி வைத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்!

தமிழக அளவில், சிறந்த விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகளை உருவாக்கிடும் வகையில், விளையாட்டு துறைக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது.அதன் அடிப்படையில், தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உலகளாவிய அளவில் நடைபெறுகிற, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெறுவதற்காக மாநில அளவிலான பல்வேறு போட்டிகள், தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி பாளையங்கோட்டை, சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் வளாகத்தில், இன்று {ஜனவரி.22} இடையேயான, மாநில அளவிலான, பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினம் நீச்சல் போட்டிகளை, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு. சிவ குமார், இன்று { ஜனவரி. 22} காலையில், பச்சைக்கொடி அசைத்து, துவக்கி வைத்தார். மாநிலம் முழுவதிலும் இருந்து, மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற, பள்ளி மணவர்கள், மாணவிகள், இந்த போட்டிகளில் பங்கேற்கினறனர். இம்மாதம் (ஜனவரி) 25- ஆம் தேதி முடிய, மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் மொத்தம் 47 பிரிவுகளில் போட்டிகள் இடம் பெற்றுள்ளன. முதல் இரண்டு தினங்கள் மாணவிகளுக்கும், அடுத்த இரண்டு தினங்கள் மாணவர்களுக்கும், போட்டிகள் நடைபெறுகின்றன. மாணவிகளை பொறுத்தவரை 1471 பேரும், மாணவரகளை பொறுத்தவரை 2172 பேரும், கலந்து கொண்டுள்ளனர். பன்னாட்டு அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில், திருநெல்வேலி மாவட்ட நீச்சல் வீரர் எம்.எஸ்.நித்தீஷ் கலந்து கொண்டார். தேசிய அளவில் நடைபெற்ற 50 மீட்டர் பட்டர்பிளை போட்டியில், பெண்டன் ரோகித் சாதனை படைத்துள்ளார். இன்றைய துவக்க விழாவில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இ. ராமசாமி, இடைநிலை கல்வி அலுவலர் சாய் சுப்புலட்சுமி உட்பட பலர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.