- Advertisement -

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் சமூக நல அமைப்புகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்!

- Advertisement -

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 01.01.2026 முதல் 31.01.2026 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, சாலை பாதுகாப்பு குறித்து விளக்கி, விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Vagai
Bismi

திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் ரா.கோவிந்தராஜ்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சதீஷ் குமார் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகரும், இயக்குனரும், மாற்றம் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ், சாக்ஸிடு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சசி, தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திக்,  போக்குவரத்து வணிகப் பிரிவு திருச்சி மண்டல உதவி மேலாளர் சுரேஷ் குமார், உதவி மேலாளர் சேகர் (KKBT), உதவி பொறியாளர் சக்தி, சரவண பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், விதி மீறுதல்களால் ஏற்படும் விளைவுகள் குறிக்கும் எடுத்துரைத்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அறிவுரை வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்