லேப்டாப் திட்டத்தை நிறுத்தியவர் இ.பி.எஸ் – மு.க.ஸ்டாலின்
அமித் ஷாவா இல்லை அவதூறு ஷாவா கடும் கண்டனம் !
லேப்டாப் திட்டத்தை நிறுத்தியவர் இ.பி.எஸ் – மு.க.ஸ்டாலின்

அமித் ஷாவா இல்லை அவதூறு ஷாவா கடும் கண்டனம் !
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார்.
அப்போது மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
ஓய்வு கால வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார் என கூறி உள்ளனர். 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள் பொங்கலை கொண்டாட ரூ.3000 தருவதாக அறிவித்துள்ளோம். சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன். 2019ம் ஆண்டு இ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது லேப்டாப் திட்டத்தை நிறுத்தி வைத்தார். அ.தி.மு.க. ஆட்சியில் 55,000 லேப்டாப்களை வீணடித்து விட்டதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. டெல், ஏசெர், எச்.பி. போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா. அமித்ஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி அவதூறுகளை பரப்புகிறார்கள். அமித் ஷாவா இல்லை அவதூறு ஷாவா என நினைக்கும் அளவிற்கு உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி உள்ளார். இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல. தமிழகத்தில் கலவரம் செய்துவிடலாம் என்ற எண்ணம் நான் இருக்கும் வரை நடக்காது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.





Comments are closed.