திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா!
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா!
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு ஆகும். இந்த நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாகவும் அதன் வழியே சென்றால் மறுபிறவி இருக்காது என்பதும் நம்பிக்கை. அதன்படி இன்று (டிசம்பர் 30), அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றபடும் சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில். 
இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. இதையடுத்து பகல் பத்து 10-ம் திருநாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் அதிகாலை 5.45 மணிக்கு திறக்கப்பட்டது.தமிழகத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வாசல் வழியாக கடந்து சென்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Comments are closed.