கர்நாடகா பேருந்து விபத்து!

பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

கர்நாடகா பேருந்து விபத்து!

பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர்
விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.கர்நாடகாவில் நடந்த விபத்து சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Bismi

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,”கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடந்த துயரமான பேருந்து தீ விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இது உயிரழப்பை ஏற்படுத்தியுள்ளது. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்