திருச்சி அகில இந்திய வானொலி பண்ணை வானொலியின் அறுபதாம் ஆண்டு விழா!

திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!

திருச்சி அகில இந்திய வானொலி பண்ணை வானொலியின் அறுபதாம் ஆண்டு விழா!

திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!

Bismi

திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்! நிகழ்வானது நடைபெற்றது. திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.திருச்சி அகில இந்திய வானொலி பண்ணை வானொலியின் அறுபதாம் ஆண்டு விழா குறித்து வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில்,குக்லியெல்மோ மார்க்கோனி 1874-ல் இத்தாலியில் பிறந்தார். கம்பிகளின்றி நெடுந்தூரம் செய்திக்குறிப்புகளை அனுப்ப மின்காந்த அலைகளைப் பயன்படுத்தலாம் என்பதைத் தன் இருபதாவது வயதில் உணர்ந்தார்.குரலை ரேடியோ மூலம் அனுப்பும் முறையை 1920ஆண்டுகளில் தொடங்கினார். “குரல் ஒலி” சுமந்த ரேடியோ பதினாறே ஆண்டுகளில் இந்தியா வந்துவிட்டது. 1936 ஜூன் 8-ம் தேதி “ஆல் இண்டியா ரேடியோ” (AIR) உருவாகி தன் ஒலிபரப்பைத் தொடங்கியது. அந்த ஒலி அலை மூன்றே ஆண்டுகளில் 1939-ல் திருச்சிக்கும் வந்துவிட்டது. இதுதான் வானொலி திருச்சிக்கு வந்த கதை ஆகும்.

பசுமைப் புரட்சியை விதைக்க அரசு தேர்வு செய்த பத்து இந்திய வானொலி வயல்களில் திருச்சியும் ஒன்று.1966-ம் வருடம் ஜூன் 7-ல் பண்ணை இல்ல ஒலிபரப்பு தொடங்கியது. 1970-75 களில் இதன் பயன்பாடு உச்சம் தொட்டது. பல ஆயிரம் விவசாயிகள் ரேடியோவோடு வயலுக்குப் போனார்கள். ஆடுதுறை-27 என்ற உயர் விளைச்சல் நெல் பல லட்சம் ஏக்கரில் பயிரிட வானொலியே காரணமானது. அதனால் அதை மக்கள் “ரேடியோ நெல்” என்று அழைக்கப்பட்டது . ஒரு நாளில் 110 நிமிடங்களைப் பண்ணை இல்லத்திற்கு ஒதுக்கி சாதனை செய்தது திருச்சி வானொலி. வேளாண்மைத் துறை தொடங்கி பல அரசு அமைப்புகளோடும் இணைந்து வானொலி நடந்த ராஜபாட்டையின் தொடர்ச்சியாகவே “உழவர்களுக்கு”, “வேளாண் அரங்கம்”, “உழவர் உலகம்” ஆகிய நிகழ்ச்சிகள் இன்றும் தொடர்கின்றன. 2025ஆண்டு அகில இந்திய வானொலி திருச்சியின் பண்ணை இல்ல ஒலிபரப்பின் 60 வது ஆண்டு வைர விழாவாகும். வேளாண்மை மற்றும் கிராமப்புற சமூகத்தின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்போடு பாடுபடும் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம் ஆகும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்