மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற,கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்!

மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற,கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்!

திருநெல்வேலி,டிசம்பர்13:-

Bismi

திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் திருநெல்வேலி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம், நேற்று முன்தினம் (டிசம்பர். 13) நடைபெற்றது. காவலர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்குமாக, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலும், நடைபெற்ற, இந்த இலவச முகாம்,திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் உத்தரவின்படி, நடைபெற்றது. இந்த முகாமில், உடல் பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு (RBS), இரத்த அழுத்த பரிசோதனை (BP), நுரையீரல் செயல்திறன் பரிசோதனை உள்ளிட்ட, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், உயர் தொழில்நுட்பத்தினால் ஆன, அதிநவீன மருத்துவக்கருவிகள் மூலம் பரிசோதனைகள், மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த முகாமில்,சுத்தம் மற்றம் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகளும், வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பயன் பெற்றனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்