யுடிஎஃப் (UDF) தலைமையில் வெற்றியை நோக்கி காங்கிரஸ் -கேரள உள்ளாட்சி தேர்தல்

யுடிஎஃப் (UDF) தலைமையில் வெற்றியை நோக்கி காங்கிரஸ் -கேரள உள்ளாட்சி தேர்தல்

 கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.முதல் கட்டத்தில் 71 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 76 சதவீதம் என மொத்தத்தில் 73.69 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலை விட 2 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியிருந்தது.உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 13)காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, ஆளும் எல்டிஎஃப்-ஐ விட அதிக கிராம மற்றும் வட்டாரப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் முன்னிலை வகித்தது.

Bismi

மாநில தேர்தல் ஆணையம் (எஸ்இசி) பகிர்ந்துகொண்ட நிலவரங்களின்படி, பிற்பகல் 12.50 மணி நிலவரப்படி, ஆளும் எல்டிஎஃப் 366 மற்றும் யுடிஎஃப் 473 கிராம பஞ்சாயத்துகளில் முன்னிலை வகித்தன.யுடிஎஃப் 55 நகராட்சிகள், 8 மாவட்ட பஞ்சாயத்துகள், 81 பிளாக் பஞ்சாயத்துகள் மற்றும் 4 மாநகராட்சிகளிலும் முன்னிலை வகித்தது. அதே நேரத்தில், எல்டிஎஃப் 28 நகராட்சிகள், 6 மாவட்ட பஞ்சாயத்துகள், 65 பிளாக் பஞ்சாயத்துகள் மற்றும் ஒரு மாநகராட்சியில் முன்னிலை வகித்தது.

பாஜக தலைமையிலான என்டிஏ 26 கிராம பஞ்சாயத்துகள், 2 நகராட்சி மற்றும் ஒரு மாநகராட்சியில் முன்னிலை வகிக்கிறது. முழுமையான முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான என்டிஏ பெரும்பான்மை எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. 101 இடங்களைக் கொண்ட மாநகராட்சியில் என்டிஏ தற்போது 49 இடங்களிலும், எல்டிஎஃப் 28 இடங்களிலும், யுடிஎஃப் 19 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மாநகராட்சி மன்றத்தில் பெரும்பான்மையைப் பெற என்டிஏ-க்கு 51 இடங்கள் தேவை. இதனால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற இரண்டு சுயேச்சைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்