மதி​முக சார்​பில் பல கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சமத்துவ நடைபயணம் – மதி​முக பொது செயலாளர் வைகோ தகவல்

மதி​முக சார்​பில் பல கோரிக்​கைகளை

வலி​யுறுத்தி சமத்துவ நடைபயணம் – மதி​முக பொது செயலாளர் வைகோ தகவல்

திருச்சியில் தொடங்கவுள்ள சமத்துவ நடைபயணத்தூக்கான கொடியை வைகோ அறிமுகம் செய்தார் .

மதி​முக சார்​பில் ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடை​பெறும் சமத்​துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்​ளார்.

சமத்​துவ நடைபயணம் ஜனவரி 2-ம் தேதி திருச்சியில் தொடங்கி ஜனவரி 12-ம் தேதி மதுரையில் நிறைடைகிறது .

Bismi

சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

மதி​முக சார்​பில் போதைப்​பொருள் ஒழிப்​பு, சாதி மோதல் தடுப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி என்​னுடைய தலை​மையி​லான சமத்​துவ நடைபயணம், 2026 ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11 நாட்​களுக்கு நடை​பெறுகிறது.அதன்​படி 190 கி.மீ. வரை நடை​பெறும் நடைபயணத்​தை, திருச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​து, இந்​துக்​கள் வழிபடும் கோயில், கிறிஸ்​தவர்​கள் வழிபடும்

தேவால​யம், இஸ்​லாமியர்​கள் வழிபடும் மசூ​தி, சீக்​கியர்​கள் வழிபடும் குருத்​வா​ராக்​கள் அடங்​கிய சின்​னங்​கள் பொருந்​திய சிவப்​பு, மஞ்​சள் நிற கொடியை எனக்கு

வழங்​க​வுள்​ளார். சமத்துவ நடைபயணத்​துக்​காக மதி​முக தொண்​டரணி, இளைஞரணி, மாணவரணி​யில் இருந்து ஆயிரம் பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்