டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு!

 இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று (டிசம்பர் 05) காலை ஜனாதிபதி மாளிகையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு முறைப்படி, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய ராணுவ அணிவகுப்பை புதின் பார்வையிட்டார். இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை திரவுபதி முர்மு, புதினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

Bismi

இதன் தொடர்ச்சியாக புதினுடன் வருகை தந்துள்ள அந்நாட்டின் தூதுக்குழுவினரை புதின், திரவுபதி முர்முவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கைகளை குலுக்கி, திரவுபதி முர்மு வரவேற்றார்.அதன்பின் அங்கிருந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினை​விடத்​தில் செல்லும் புதின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த இருக்கிறார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் அதி​காரப்​பூர்​வ​மாக பேச்சுவார்த்தை நடத்த உள்​ளனர். அப்​போது பாது​காப்​பு, அணு சக்தி, தொழில்​நுட்​பம், வர்த்​தகம், விண்​வெளி உள்ளிட்ட துறை​கள் தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 25 ஒப்பந்​தங்​கள் கையெழுத்தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

உச்சி மாநாடு நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திலும் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். அதன்பின், இன்று இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மாஸ்கோ செல்கிறார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்