முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!
காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது!
முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!
காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது!
திருநெல்வேலி,நவம்பர்.19:-
“இரும்பு பெண்மணி” என்று போற்றி புகழப்பட்டவரும், நாட்டின் 3- வது பிரதமரும், ஒரே ஒரு பெண் பிரதமருமான, “அன்னை இந்திரா காந்தி”யின்,108- வது பிறந்த நாள் விழா,
(நவம்பர்.19) நாடெங்கிலும் நடைபெற்றது.திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவின் போது, வண்ணார் பேட்டையில் உள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முகப்பில் நிறுவப்பட்டுள்ள, அன்னை இந்திராவின் முழு திருவுருவச் சிலைக்கு, காங்கிரஸ் கட்சியின்,
தச்சநல்லூர் மண்டல தலைவர் ரெங்கராஜ் தலைமையில்,
மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் கவிப் பாண்டியன்,
மாவட்டத் துணைத் தலைவர்கள் S.S.மாரியப்பன், INTUC கண்ணன் ஆகியோர் முன்னிலையில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.சங்கரபாண்டியன் தலைமையில், “மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்தப்பட்டது. பின்னர், அங்கிருந்த அனைவருக்கும், “இனிப்புகள்” வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்,

மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள்
P.N.உதயகுமார், சொக்கலிங்க குமார், “பரணி” இசக்கி, மாநிலச் செயலாளர் அனீஸ்,மாவட்ட துணைத் தலைவர்கள் “குறிச்சி”வெள்ளை பாண்டியன்,ராமகிருஷ்ணன்,லெனின் பாரதி,
தியாக சுரேஷ்,”வண்ணை”சுப்பிரமணியம்,சிவாஜி முப்பிடாதி,சிவாஜி கலைமணி
மாவட்ட பொதுச்செயலாளர் “குறிச்சி” கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் K.S.மணி சின்னப்பாண்டி,வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பிலேந்திர ராஜ், கணேசன்,
மண்டல காங்கிரஸ் தலைவர்கள், முகம்மது அனஸ் ராஜா
துணைத் தலைவர் மணிகண்ட நாராயணன்,விவசாய முத்துராமலிங்கம், சரோஜா ராஜ்
“ராணுவ பிரிவு”அனந்த பத்மநாபன்,அலெக்ஸ் பாண்டியன்,நிர்வாகிகள் மரிய அருள்,
நெல்லை தியாகு, செந்தூர் பாண்டியன் மற்றும் தேசியத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.