சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது – விசிகவினர் ஆர்ப்பாட்டம்
சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது – விசிகவினர் ஆர்ப்பாட்டம்
சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நடக்க வேண்டிய ஆட்டு வார சந்தை – வெள்ளிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து நடைபெறுவதால் திருட்டு ஆடுகளை இரவில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு
இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியின் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆட்டு சந்தை முற்றுகை போராட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை காலம் காலமாக நடைபெறுவது வழக்கம் அதிகாலை 3 மணிக்கு துவங்கும் ஆட்டுச் சந்தையில் மதியம் 2 மணி வரை நடைபெறும், ஆட்டுச் சந்தைக்கு திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், முசிறி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆடு விற்பனையாளர்கள் வந்து விற்பனை செய்வது வழக்கம், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சமயபுரம் காட்டு சந்தைக்கு வருகை தந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தற்போது வார சந்தையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பலரும் குற்றச்சாட்டுகள் தெரிவித்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி தொடங்கி ஆட்டுச் சந்தை அதிகாலை 2:00 மணிக்கு ஆடு விற்பனை இருட்டில் முடிந்து விடுவதாகவும் இதனால் திருட்டு ஆடுகள் விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் சீட்டு வசூல் என்ற பெயரில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடமும் ஆட்டிற்கு 80 ரூபாய் என வசூல் செய்யப்படுகிறது அதே ஆட்டை வியாபாரிகள் வாங்கி வெளியேசெல்பவர்களிடம் 80 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. மேலும் சந்தைகளுக்கு ஆடுகளை ஏற்றி வரும் வாகனத்திற்கு 150 முதல் 200 ரூபாய் வரை வசூல் செய்து இதற்கு முறையான ரசிதுகள் வழங்கப்படுவதும் இல்லை.

ஆனால் வசூல் செய்தாலும் அங்கு போதிய எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை முக்கியமாக கழிப்பறை ,மின் விளக்குகள் ,சாலை வசதி, குடிநீர் வசதியும் இல்லை என சமயபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சந்தையின் நுழை வாழ்வில் வாகனங்களை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதற்கு முறையான தீர்வு எட்டப்படவில்லை என்றால் போராட்டம் வலுப்பெறும் என தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குரு அன்புச்செல்வனிடம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் சமயபுரம் காவல் ஆய்வாளர் ரகுராமன் வார சந்தை ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர் இதற்கு பிறகு இரவில் சந்தை நடைபெறாது வழக்கம் போல் சனிக்கிழமை அதிகாலை நடைபெறும் என உறுதியளித்தபின் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற பின்னர் மீண்டும் சமயபுரம் ஆடு வார சந்தை வழக்கம் போல் நேற்று இரவோடு இரவாக சந்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மற்றும் பேரூராட்சி தலைவர் அவரிடம் கேட்ட பொழுது காலம் காலமாக சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்து மதியம் மூன்று மணி வரை நடைபெறும் ஆனால் தற்பொழுது ஏலம் எடுத்தவர்கள் நாங்களும் பல ஆலோசனைகளை வழங்கியும் இவ்வாறு செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர் .
ஏலம் எடுத்தவர்களின் முறைகேடுகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ,பேரூராட்சி தலைவர் துணை போகிறார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்…..





Comments are closed.