- Advertisement -

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

- Advertisement -

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Bismi

கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுப் பணிகளுக்காக கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு நவ.25, 26 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 25-ந்தேதி கோவையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பங்கேற்கிறார். மேலும் அன்றைய தினமே கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து 26-ந்தேதி ஈரோடு-மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தீரன் சின்னமலையின் மணிமண்டபத்திற்கு சென்று மலர் தூவி மரியதை செலுத்துகிறார். மேலும் ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.மாலையில், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை பரமசிவன் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கிறார். இவ்விழாவில், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்