- Advertisement -

சூர்யாவின் 47-வது படம் குறித்து வெளியான அப்டேட்!

- Advertisement -

சூர்யாவின் 47-வது படம் குறித்து வெளியான அப்டேட்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான ‘கருப்பு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக் உள்ளார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனிடையே, சூர்யா 47படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதனால் சூர்யா 47 படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்