- Advertisement -

கமிஷன் இல்லை – திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!

- Advertisement -

கமிஷன் இல்லை – திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!

தமிழ்நாட்டில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட கால் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வழங்கும் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். குறிப்பாக நகரங்களில் பீக் ஹவர்ஸில் கால் டாக்ஸிகளின் தேவை அதிகம். அந்த வகையில் புதிதாக தற்போது ஜூக்னோ (JUGNOO) என்ற புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Bismi

தமிழகத்தில் முதற்கட்டமாக நாகர்கோவில், திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை இன்று முதல் திருச்சி மாநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி தென்னூர் உழவர்சந்தை பகுதியில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்வில் நிறுவனத்தின் சார்பில் முத்துமணி, சுமன் குமார் மற்றும் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். விரைவில் தமிழகம் முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. முதல் 1 கி.மீ-க்கு அடிப்படைக் கட்டணம் ரூ.50 மற்றும் அதற்குப் பிறகு பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் பயணிகள் ரூ.18 செலுத்த வேண்டும்.

Vagai

இதுகுறித்து ஜூக்னோ நிறுவன ஊழியர் முத்துமணி கூறுகையில்,..

ஜூக்னோ ஆப் ஒரு இந்தியன் கம்பெனி மக்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். அதற்காக செயலியில் 24 மணி நேர ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சாதகமான முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசி கட்டணம் சேர்த்து வாங்கப்படாது. இந்த செயலி தற்போது இந்தியா முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் மெட்ரோ சிட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் துவக்கப்படும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்