திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்!

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்!

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி நவம்பர்.13:

Bismi

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான, “விமன் இந்தியா மூவ்மெண்ட்” ( WOMEN INDIA MOVEMENT) அமைப்பின்,”செயற் குழு கூட்டம்” நேற்று( நவம்பர்.13) மாலையில், நகர தலைவி ஹமீதா அக்பர் தலைமையில், நடைபெற்றது. நகர செயலாளர் ஜன்னத், அனைவரையும் வரவேற்று பேசினார். இணை செயலாளர் ஜெஸிமா, முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள மகளிர் அணி “பூத் கமிட்டி” நிர்வாகிகள் நியமனம் குறித்த தகவல்களை, அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்! என, தீர்மானிக்கப்பட்டது. தீவிர திருத்தப் படிவங்களை ( SIR), தவறில்லாமல் சரியாகவும்- கவனமாகவும் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக,”ஏர்வாடி பேரூராட்சி” நிர்வாகம் சார்பாக, அனைத்து வார்டுகளிலும், “சிறப்பு முகாம்கள்” நடத்தக் கேட்டு, மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எஸ்டிபிஐ மகளிர் அணியான, “விமன் இண்டியா மூவ்மெண்ட்” அமைப்பிற்கு, புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, “சேர்க்கை முகாம்” களை, “ஏர்வாடி பேரூராட்சி” பகுதி முழுவதிலும் நடத்திட, தீர்மானிக்கப்பட்டது.

10வது வார்டில், ஹாஜி நகர் தெருக்களில், குண்டும்-குழியுமாக உள்ள வழித்தடங்களை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக, சரி செய்து தரக்கோரி பலமுறை ஏர்வாடி பேரூராட்சியில் நிர்வாகத்திடம், பலமுறை நேரிலும், இணையதளம் மூலமும், மனுக்கள் கொடுத்தும் கூட, தொடர்ந்து இந்த “கோரிக்கை” புறக்கணிக்கப்பட்டு வருகிறது, எனவே, மககள் சக்தியை ஒன்று திரட்டி, போராட்டம் பண்ணுவது! என, இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த “செயற்குழு” கூட்டத்தில்,

எஸ்டிபிஐ கட்சியின் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி தலைவர் காஜா பிர்தவ்ஸி,ஏர்வாடி நகர தலைவர் பசீர் அகமது , வார்டு கவுன்சிலர்கள் ஜன்னத், ஹலீமா ஆகியோர், “சிறப்பு அழைப்பாளர்களாக” கலந்து கொண்டனர். மகளிர் அணி நகர பொருளாளர் பாத்திமா, செயற்குழு உறுப்பினர்கள் பர்கானா ,பர்வீன் நிஷா ,ரகுமான் பீவி , சைபுன்னிஷா ஆகியோரும், இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்