அருள்மிகு மகா சித்தர் போகர் அவர்களின் அவதாரங்கள்
போகரின் திருச்செந்தூர் சுப்பிரமணியர் அவதாரம்
அருள்மிகு மகா சித்தர் போகர் அவர்களின் அவதாரங்கள்
போகரின் திருச்செந்தூர் சுப்பிரமணியர் அவதாரம்
சித்தர் என்று சொன்னாலே நவகோடி சித்தர்களில் மக்களின் மனதிலும் சிந்தனையிலும் தோன்றும் மகா சித்தர் போகர் பெருமான் பல யுகங்களிலும் பலவித அவதாரங்களை எடுத்து பல அற்புதங்களை செய்துள்ளார். அதில் அவர் போகர் என்ற பெயரில் செய்த நவபாஷாண முருகன் சிலை உலக முழுவதும் பிரசித்தி பெற்றது. ஆனால் அவர் எடுத்த அவதாரங்களை பற்றி அவர் தனது நூலான ஜனன சாகரம் ௫௫௭ என்ற நூலில் விவரமாக குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணியர் அவதாரம்:
அகத்தியர் சதுரகிரியில் குளிகை ஒன்று செய்து அதை அழகான குதிரைக்கு கொடுத்து பறக்க செய்தார். அதை பார்த்து போகர் நான் அதிலேறிய சுற்றிவரலாமா என்று கேட்கவே அகத்தியரும் சரி என்று சொல்ல போகர் ஒரு மூச்சுக்கு 60 காத தூரம் பறந்து சென்றார் இப்படி சுற்றிவந்தபின் அந்த குதிரையை மேலும் வேகமாக பறக்க போகர் மருந்து செய்தார். பின்பு அதை ப்ரஹ்மாவிடம் கொடுத்துவிட்டு கைலையில் உள்ள ஈசனாரிடம் சென்று விட்டார்.

அங்கு கைலையில் பிரம்மா விஷ்ணு தேவர்களோடு ஈசனார் இருந்தார். அவர் போகர் செய்த மருந்தை பற்றி அங்கு இருந்த நந்தி மற்றும் துவாரபாலகர் அனைவரிடம் பெருமையாக சொன்னார். சொல்லிவிட்டு இவர்களால் ஆவது ஒன்றுமில்லை என்று சொல்லி அவர்களை ராட்சதர்களாய் பிறக்க உத்தரவுமிட்டார். அப்படி பிறந்த அவர்கள் கடும் தவம் செய்து ஈசனாரிடமே வாரமும் பெற்றுக்கொண்டனர். பின்பு அவர்கள் தங்கள் தவ வலிமையால் ப்ரஹ்ம்மா, தேவர்கள், ரிஷிகள் முதலியோரை சிறைபிடித்து வைத்தனர் . இதை அறிந்து ஈசனார் போகரை அழைத்து நிருமணியக்காரனென்று இருக்க சொன்னார். போகர் அவர் சொல்படி மூலாதாரம் முதல் ஆறு ஆதாரங்களையும் (சக்கரங்களையும்) கடும் தவத்தால் ஒன்றாய் திரட்டி முழு பலத்துடன் நின்றார். அப்படி ஆறு மணிகளையும் ஆறுமுகங்களாய் திரட்டி கொண்டு இருந்ததாலே ஈசனார் அவருக்கு சுப்பிரமணியர் ( ஆறு மணிகளை, ஆறு முகங்களாய்) என்று பெயர் சொல்லி வல்லசுப்ரமணியராய் அவதரிக்க செய்தார்.
ஆறு ஆதாரத்தை, ஆறு முகங்களாகவும், வாயுக்களை கரங்களாகவும், குண்டலினி சக்தியை வேலாகவும், அக்னியை கதாயுதமாகவும் செய்து வென்றுவா என்று ஈசனார் சொல்லவே போகர் தேவியை பூஜை செய்து மேலும் சக்தி பெற்று சூரபத்மனிடம் சென்று தேவர்களை விடுவிக்க சொல்லி கேட்கவே அவன் சுப்ரமணியரையும் (போகர்) வீரர்களிடம் சொல்லி பிடுத்துவர சொல்லவே சுப்பிரமணியர் ஆறு நாள் தொடர்ந்து போரிட்டு சூரபத்மனின் வீரர்களை கொன்று ஆறாம் நாள் சூரபத்மனையும் வென்று தேவர்கள் அனைவரையும் மீட்டு கொண்டு ஈசனாரிடம் வந்து சேர்ந்தார்.
அப்படி போகர் சுப்ரமணியராய் அவதரித்து போர் புரிந்து தேவர்களை அசுரர்களிடம் இருந்து காத்து நின்றதால் சிலர் சுப்ரமணியரை போர் கடவுள் என்றும் கூறுவார். இப்போர் நடந்த இடம் தற்காலிக திருச்செந்தூர் என்று அழைக்கப்படும் கடற்கரை பகுதி. இதுவே பிற்காலத்தில் சுப்ரமணியரை தேவர்களை காத்தது போன்று சாமானிய மக்களையும் காத்து ரட்சிக்கும் பொருட்டு இந்நிகழ்ச்சியின் விளைவாக திருச்செந்தூரிலில் சுப்பிரமணியருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.
ஓம் போக தேவாய நம!
ஆன்மீக ஆசிரியர் பி.கார்த்திக், M.Sc.IT





Comments are closed.