- Advertisement -

டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

- Advertisement -

டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை.

 

புது தில்லி, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 01 அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று மதியம் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு & ரயில்வே போலீஸ் சார்பாக திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.

 

Vagai
Bismi

தெற்கு ரயில்வே

முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், அருள் ஜோதி உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் பிரசாந்த் யாதவ் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில், திருச்சி RPF ஆய்வாளர் அஜய் குமார்,திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சரவணன், உதவி ஆய்வாளர் & ரயில்வே போலீஸ் DSP சக்கரவர்த்தி & இன்ஸ்பெக்டர் ஷீலா அவர்கள் தலைமையில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை,சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா, வெடிகுண்டு தடுப்பு பிரிவு தண்டபாணி, முருகேசன் & திருமலை இணைந்து திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது,

சோதனையின் போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் & எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் திருச்சி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ராயிலிலும் பயணிகள் உடமைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்