தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) தேர்வில், 25சதவிகிதம் பேர், தேர்வு எழுத வரவில்லை! மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) சார்பாக, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு, குரூப் ll,ll A (OMR) ஆகியவற்றிற்காக, இன்று (செப்டம்பர். 28) தமிழகம் முழுவதும், நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த தேர்வு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 மையங்களில், மொத்தம் 47 அறைகளில் (HALLS) நடைபெற்றன. இதற்காக மொத்தம் 13,621 பேருக்கு, தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டுகள் (HALL TICKETS ) வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று நடைபெற்ற தேர்வில், 10,155 பேர் மட்டுமே கலந்து கொண்டு, தேர்வு எழுதினர். மீதியுள்ள 3466 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது மொத்தத்தில் 75சதவிகிதம் பேர் மடடுமே, தேர்வு எழுதினர். மீதியுள்ள 25சதவிகிதம் பேர் “ஆப்சென்ட்” (ABSENT) ஆகிவிட்டதால், தேர்வு எழுதவில்லை. இந்த தகவல்களை, இன்று (செபடம்பர். 28) மாலையில், திருநெல்வேலியில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர், பாளையங்கோட்டை ரஹ்மத் நகர், மேகதலின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற TNPSC தேர்வினை, நேரில் பார்வையிட்டு “ஆய்வு” செய்தார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.