தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

தந்தை பெரியாரின் 147_வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில், கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் தலைமை அரசு கொரடாவுமான ஆர்.மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.செல்வராஜ், டி.இந்திராகாந்தி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட கழக அவைத்தலைவர் சமயபுரம் டி.ராமு, மாவட்ட கழக துணைச் செயலாளர் கல்லடிப்பட்டி எம்.கோவிந்தராஜ், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஜெ.அறிவழகன் விஜய், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் என்.கண்ணதாசன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஜி.ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.பி.முத்துகருப்பன், எல்.ஜெயக்குமார், கோப்பு அ.நடராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் ரவிசங்கர், எட்டரை த.அன்பரசு, ஒன்றிய கழக பொருளாளர் டி.சேகர்மணி, திருப்புகழ் செல்லதுரை, கே.எஸ்.ராஜேந்திரன், எல்.ஜெ.நவநீதகிருஷ்ணன், தினேஷ்(எ)எஸ்..நடராஜமூர்த்தி, சமயபுரம் தினேஷ், மாத்துர் ராஜா, பெரியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





Comments are closed.