மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.

திருச்சி மாவட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் ரமேஷ் என்ற இளைஞர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக திருச்சி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் மற்றும் ரமேஷ் இவருக்கு ஆயுள் தண்டனையும் தலா 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் கீதா ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினம் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.





Comments are closed.