- Advertisement -

தேர்தல் ஆணையம், வாக்காளர் நீகக ஆணையமாக செயல்படுகிறது!திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு!

- Advertisement -

தேர்தல் ஆணையம், வாக்காளர் நீகக ஆணையமாக செயல்படுகிறது!திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு!

 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பிருந்தாகாரத்,

“மகாகவி” சுப்பிரமணிய பாரதியாரின், 104-வது “நினைவு” நாளான இன்று (செப்டம்பர். 11) திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள, பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு, “மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்திய பின்பு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, அவர் கூறியதாவது:-

Vagai

“பாரதியாரின் மரபைக் காக்க, உறுதி ஏற்க வேண்டும்!” என்னும், குறிக்கோளுடன், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தது, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.போன்ற இந்துத்துவா அமைப்புகள், தமிழக மக்களின் ஆதரவைத் தேடி, தமிழகத்திற்குள் வர முயற்சிப்பதை, நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்! மேலும், இந்த சக்திகள், இந்திய அரசியலமைப்பை, இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் விதிமுறைகளை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் இந்திய மக்களின் சமத்துவம் ஆகியவற்றை, தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றன. சாதி மற்றும் வகுப்புவாதம் ஆகிய இரண்டும், இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலையை அச்சுறுத்துகிற பயங்கரமான, நச்சுத்தன்மை வாய்ந்த இரட்டையர்களாக உள்ளன. தமிழக மக்கள், இந்த சக்திகளை, நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.

Bismi

கவுரவக் கொலைகளுக்குத் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும்.இந்த கோரிக்கையை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும், முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண வேணும். 1950-ஆம் ஆண்டுகளில், சட்ட மாமேதை, பாபா சாகேப் அம்பேத்கர், இந்து சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். ஒரு திருமணத்திற்கு,ஒரு சாதி என்ற நிபந்தனையை, அவர் அகற்றினார். ஆனால், இன்று, அந்த சீர்திருத்தத்தை மாற்றியமைத்து, இந்திய அரசியலின் மையத்திற்கு, மீண்டும் சாதியைக் கொண்டுவர விரும்பும் சக்திகளை, நாம் காண்கிறோம். திருநெல்வேலியில், சமீபத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட, கவின் செல்வ கணேஷ் குடும்பத்தினர் மற்றும் அவரது பெற்றோரை சந்திப்பதற்கு, திட்டமிட்டுள்ளோம். அவர்களின் மகனின் மரணம், சாதி வெறி மற்றும் இந்தியாவில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த சாதிய அமைப்புக்கு எதிரான ஒரு பெரிய போராட்டத்திற்கான தியாகமாகவே, நாம் கருத வேண்டும். இந்தப் படுகொலையானது, நம் அரசியலின் சில பிரிவுகளின் ஆதரவுடன் நடந்த, ஒரு மாபெரும் குற்றம் ஆகும்.

தேர்தலுக்கான நேரம் வரும்போது, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் வியூகம் என்பது, மக்களுடன் இருப்பதும், மக்களுக்காகப் போராடுவதும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைத் தோற்கடிப்பதுமே ஆகும். பீகாரில் என்ன நடந்தது, நடக்கிறது? என்று, நீங்கள். பார்க்கிறீர்கள். அங்கு வாக்குப்பதிவு முறையை முற்றிலுமாக சீர்குலைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இது பிரிட்டிஷ் காலனித்துவக் காலத்தை நினைவூட்டுகிறது, அப்போது, சொத்து உரிமையாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க உரிமை உண்டு. தற்போது, பீகாரில் உள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்களை வடிகட்ட முயற்சித்தது. ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, ஆதார் அட்டையை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம், வாக்குகளை உறுதி செய்வதற்குப் பதிலாக, வாக்காளர் நீக்க ஆணையமாக, செயல்படுகிறது. இந்தியா கூட்டணி கூறியதை, உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள், உறுதிப்படுத்து கின்றன. வாக்காளர் பிரச்சனையில், நாம் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.

நாடாளுமன்ற அடிப்படையில், குறைந்த இடங்கள் இருந்தாலும், இடதுசாரி சித்தாந்தத்தைப் பொறுத்தவரை, களத்தில் உள்ள வலிமையைப் பொறுத்தவரை, கம்யூனிஸ்டுகள் எப்போதும் போல் வலுவாக இருக்கின்றன. சமூக ஊடகங்களில் ஒரு முக்கியமான இருப்பையும், கொண்டுள்ளோம். கம்யூனிஸ்டுகள், சமூக ஊடகங்களில் இல்லை என்று கூறுவது, முற்றிலும் தவறு. சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக, கம்யூனிஸ்ட்கள் உள்ளன. பல ஆண்டுகளாக, கட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளராக நானே இருந்துள்ளேன். தொழிலாளர் வர்க்கத்தின், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதே கம்யூனிஸ்ட்களின் அடிப்படை இயல்பு ஆகும்!”- இவ்வாறு, பேட்டியின் போது, பிருந்தா காரத் கூறினார்.அப்போது, கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், மாநிலக்குழு கனகராஜ், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கே.ஸ்ரீராம் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, நேற்றிரவு ( செப்டம்பர். 10) பாளையங்கோட்டை, தெற்கு பஜாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிருந்தாகாரத் உரையாற்றினார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்