- Advertisement -

தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த்திட்டம் மூலமாக, 831 ஊரகக் குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர்! நேரில் ஆய்வு நடத்திய சபாநாயகர் அப்பாவு!

- Advertisement -

தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த்திட்டம் மூலமாக, 831 ஊரகக் குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர்! நேரில் ஆய்வு நடத்திய சபாநாயகர் அப்பாவு!

 

திருநெல்வேலி மாவட்டத்தில்,605 கோடி ரூபாய் மதிப்பில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த்திட்டம் மூலமாக, 831 ஊரகக் குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர்! திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அலவலர்களுடன், நேரில் ஆய்வு நடத்திய சபாநாயகர் அப்பாவு!

Vagai
Bismi

திருநெல்வேலி, தமிழக சடடமன்ற பேரவைத் தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, இன்று(செப்டமபர். 2) காலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சாதாரண முறையில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், களக்காடு மற்றும் சேரன்மகாதேவி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள, 831 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள, சுமார் 1 லட்சம் வீடுகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள், 605 கோடி ரூபாய் மதிப்பில், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலமுன்னீர்ப்பள்ளம் தாமிரபரணி ஆற்றுப் படுகையிலிருந்து எடுககப்படும் தண்ணீர் சிங்கிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, சுத்திகரிப்பு நிலையத்திற்கு, கொணடு வருவதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக பிரத்தியேகமாக 297 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அங்கிருந்து தண்ணீர் பம்பு செயயப்பட்டு, அதனுடன் சோதனை ஓட்டமும் முடிவடைந்து விட்டன. பிரண்டமலை என்னும் இடத்திற்கு, தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 2 வார காலத்துக்குள், தெற்கு வள்ளியூரில் அமைககப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு, பிரண்ட மலையிலிருந்து தண்ணர் கொணடு செல்லப்படும். அதன் பின்னர், மீதமுள்ள அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்படும். இந்த ஆண்டு (2025) அக்டோபர் மாத இறுதிக்குள், அனைதது வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்படி செய்யப்படும்! என, துறை சார்ந்த அலுவலர்களும், ஒப்பந்தக்காரர்களும் உறுதி அளித்துள்ளனர்!”- இவ்வாறு, சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறினார். முன்னதாக அவர், மாவடட ஆட்சிததலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமையில், துறை சார்ந்த அலுவலர்களுடன், இத்திட்டம் குறித்து, நேரடியாக ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, திருநெல்வேலி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமலட்சுமி உள்பட, பலர் உடனிருந்தனர்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்