- Advertisement -

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணன் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கல் 

- Advertisement -

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணன் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கல்

 

26 வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இரானுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அவர்களின் ஊருக்கே சென்று அவர்கள் குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்படும் என ராணுவம் அறிவித்தது.

 

Bismi

அதன்படி கார்கில் போரில் பங்கேற்று வீர மரணம் அடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. மேஜர் சரவணன் வீர் சக்கிரா வீரப்பதக்கம் பெற்றவர்.

 

Vagai

இந்த நிகழ்ச்சியில் இந்திய இராணுவத்தில் இருந்து மேஜர் ராகேஷ் ரோஷன், சுபேதார் இஸ்ங்லின் மற்றும் ஹவில்தார் ராமமூர்த்தி, முன்னாள் இராணுவ வீரர்கள் ஹவில்தார் வெற்றி செல்வன் மற்றும் இளங்கோலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேஜர் சரவணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேஜர் சரவணன் சகோதிரி Dr. சித்ரா செந்தில் குமாரிடம் நினைவு பரிசை வழங்கினர்.

 

இணை ஆசிரியர் மு. சுபைருதீன்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்