பாரத சாரண- சாரணியர்கள் தென்மண்டல திரள்அணி மாநாடு! சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்!
பாரத சாரண- சாரணியர்கள் தென்மண்டல திரள்அணி மாநாடு! சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்!


தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி-ஆகிய, 10 மாவட்டங்களில் இருந்து, சாரண- சாரணிய இயக்கத்தைச் சார்ந்த, மாணவ, மாணவிகள் 650 பேரும், அவர்களை வழிநடத்துவதற்காக ஆசிரிய- ஆசிரியைகள் 100 பேரும் பங்கேற்றுள்ள, தென்மண்டல திரள்அணியின், 3 நாட்கள் மாநாடு, இன்று (ஆகஸ்ட். 21) காலையில், நாங்குநேரி அருகேயுள்ள மருதகுளம் நெல்லை பொறியியற் கல்லூரியில், மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது. இதனை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் (சபாநாயகர்) துவக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “நாட்டிலேயே அதிக அளவில், குறிப்பாக அரசு மற்றும் தனியார் துறைகளில், 41 சதவிகிதம் பெண்கள் வேலை செய்யும் மாநிலமாகவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய, இருமொழிக்கொள்கையினால், இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாகவும், அதிலும் முதன்மை மாநிலமாக, தமிழ் நாடு திகழ்கிறது!”-என்று குறிப்பிட்டார்.


நிகழ்ச்சியில்,கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தலைவர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மு. சிவ குமார், களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், சாரண, சாரணியர் இயக்க மாநில பொருளாளர் விஜயன், செயலாளர் முத்தமிழ்ப்பாண்டியன், நெல்லை பொறியியற் கல்லூரி முதல்வர் மாலிக் ராஜா, மாவட்ட கல்வி அலுவலர்கள் சங்கீதா சின்னராணி, முத்துராஜ் உட்பட, பலர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.





Comments are closed.