- Advertisement -

தீரர் சத்தியமூர்த்தி நினைவு நூலகத்தில் சுதந்திரப் போராட்ட வரலாறு, தலைவர்களின் புத்தகக் கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு 

- Advertisement -

தீரர் சத்தியமூர்த்தி நினைவு நூலகத்தில் சுதந்திரப் போராட்ட வரலாறு, தலைவர்களின் புத்தகக் கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Bismi

நமது நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருமயம்

Vagai

தீரர் சத்தியமூர்த்தி நினைவு நூலகத்தில் 14-08-2025 முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் தலைவர்களின் வரலாறு தொடர்பான புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஏழாவது நாளான இன்று MountOlive பள்ளி மாணவர்கள் 200 பேர் புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டதுடன் தங்களையும் நூலக உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். பள்ளி மாணவர்களை பள்ளியின் முதல்வர் திரு அப்துல்லா அவர்கள் தலைமையில் ஆசிரியர் பெருமக்கள் வழி நடத்தினர். இந்த நிகழ்ச்சியை திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம் ஒருங்கிணைத்து நடத்தியது. பட்டய தலைவர் Rtn. PP. K. கபூர், தலைவர் Rtn. B. அன்புமணி, செயலாளர் Rtn. M. பால்ராஜ், பொருளாளர் Rtn. SP. ராசு, Rtn. கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நூலகர் மாலதி, மகாலட்சுமி, வாசகர் வட்ட துணை தலைவர் க.பிரபு, வாசகர் வட்ட உறுப்பினர் ஆறுமுகம்,ஹரி தீர்த்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

போர்ட் ரோட்டரி சங்க நிர்வாகிகளின் செயல்பாட்டை வாசகர் வட்ட நிர்வாகிகளும் வாசகர்களும் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து மகிழ்ச்சியடைந்தனர் இது போன்ற நிகழ்ச்சிகள் மென்மேலும் தொடரும் என்று போர்ட் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்